ஜேர்மனிய பிராங்பேர்ட் மாணவர்களுக்குச் சான்றிதழ்!!
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நெறியாள்கையில் யேர்மனி பிராங்பேர்ட் வாழ் உள்ளக, வெளியக மாணவர்கள் இணைந்து உன்னதமான தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் (University Of Cambridge) சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில் (GCE A/L) ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 16.06.2022 வியாழக்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் இடம்பெற்றது.
பிராங்பேர்ட் நகரில் வரலாற்றுமிகு பாரம்பரியத்தைக் கொண்டதும் பெருமை வாய்ந்ததுமான றோமர் மாநகரசபை மண்டபத்தில் (800ம் ஆண்டுகளில் இருந்து ரோமானிய பேரசர்களால் ஆண்ட, ஆட்சி முடிவெடுக்கும் அந்த அரசியல் தளமும் இன்றைய ஜனநாக ஆட்சியின் இந்த மையவிடமான Römer அரச மாளிகையில் அமைச்சர்கள் கூடி வாதாடி முடிவெடுக்கும் அந்த சிறப்புமிக்க அரங்கில் ) குதூகலமான நிகழ்வில் கெசன் மாநில பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கல்விமான் Yanki Puersuen அவர்கள் 2020ல் சித்தியெய்திய மாணவர்களுக்கும், 2021ல் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி மாணவர்களைக் கௌரவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை