அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பான விசேட தீர்மானம்


 (12) காலை வெள்ளிக்கிழமை தினங்களில் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல் வெளிவந்த நிலையில், தற்போது அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பான விசேட வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.


இதன்படி, அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.