கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் போர்க்குற்றவாளியான இராணுவ அதிகாரியை  அங்கீகரித்தார் எப்படி?,


 இலங்கை இராணுவத்தின்  பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு தனது  ஐஸ்வர்யலக்ஷ்மி அம்பாள் ஆலய வளாகத்தில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள்  பொன்னாடை போர்த்தி மாலை மரியாதை செய்து இருக்கின்றார் 


சர்வதேச உண்மைக்கும் நீதிக்கும் அமைப்பினால் போர்க்குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் 2008 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட  கொடூர தாக்குதலின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார் 


சர்வதேச ரோம் சட்டத்தின் பிரிவு 8 (2) (e) (iv) இன் கீழ் மத வழிபாட்டு தலங்கள் மீதான கொடூர தாக்குதல்கள் போர்குற்றங்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன 


இது தவிர 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மடு சூழலில் பாடசாலை மாணவர்களின் வாகனம் மீதான தாக்குதலில்  11 குழந்தைகள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர் 


இந்த தாக்குதலிலும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் தலைமை தாங்கிய 581-571 பிரிகேட்டின் 57 ஆம் பிரிவின் அதிகாரிகளே ஈடுபட்டு இருந்தனர் 


அதே போல 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தை பிரதிநித்துவம் செய்து ஜெனீவாவில் நடைபெற்ற கொத்து குண்டுகளுக்கு (Cluster bombs) எதிரான மாநாட்டில் இலங்கை இராணுவத்தினர் இறுதி யுத்த களத்தில் ஒரு போதும் கொத்து குண்டுகளை (cluster bombs) பயன்படுத்த வில்லை என  மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இலங்கை இராணுவ கட்டமைப்பை நியாயம் செய்து இருந்தார் 


ஏதேனும் ஒரு வடிவில் தனும் தங்களுக்கு நீதி கிடைக்காதா என போராடும் ஒரு சமூகத்தின் மத தலைவராக தன்னை அடையாளம் காட்டும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியை  அங்கீகரிப்பதை எப்படி புரிந்து கொள்ளுவது என்று தெரியவில்லை 


கால கொடுமை


- இனமொன்றின் குரல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.