வடமராட்சியில் விபத்து 17 வயது மாணவன் உயிரிழப்பு!.


வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில்


மேலும் இன்னொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்.இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.


சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் மோட்டார் சையிக்கிளில் பயணித்த வேளை மாடு குறுக்காக பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.