வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற !

 நம்மைச் சுற்றி இருவேறு ஆற்றல்கள் உள்ளன. அதில் எதிர்மறை ஆற்றல் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்த வகையான ஆற்றல் நிரம்பியுள்ள இடத்தில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். மேலும் எதை செய்தாலும் அதில் இடையூறு ஏற்படும். அதோடு அனைத்துவிதமான சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இந்த ஆற்றல் சூழ்ந்திருந்தால், அதில் தோல்வியையே தழுவக்கூடும். எனவே நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும்

உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் இருந்தால், அதை உறிஞ்சி வெளியேற்ற சில உணவுப் பொருட்கள் உள்ளன. இந்த உணவுப் பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அகற்ற உதவுவதாக நம்பப்படுகிறது. இந்த வழிகள் பாரம்பரியமாக எதிர்மறை ஆற்றலை அகற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கப் பின்பற்றப்பட்டு வருகின்றன. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.

எலுமிச்சை
பல வீடுகள் மற்றும் கடைகளில் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயை கோர்த்து தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஏன் என்று தெரியுமா? எலுமிச்சை எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. அதனால் தான் பலரது வீடுகளுக்கு முன் எலுமிச்சையை தொங்கவிடுகிறார்கள். ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, அதில் எலுமிச்சையை போட்டு வீடு அல்லது பணியிடத்தில் வைப்பதனாலும், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் உறிஞ்சி வெளியேற்றப்படும்.

உப்பு
உப்பு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சுவதாக பலர் கூறுவார்கள். அதற்கு உப்பை வீட்டைத் துடைக்கும் போது நீரில் போட்டு, அந்நீரால் வீட்டைத் துடைத்தால் எதிர்மறை சக்திகள் முற்றிலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இன்னும் சிலர் வீட்டின் கிழக்கு மூலையில் உப்பு கிண்ணத்தை வைப்பது நல்லது என்றும் கூறுவார்கள். குழந்தைகள் படிக்கும் அறை/ வகுப்பறையில் ஒரு கிண்ணத்தில் உப்பை வைத்திருப்பதால், அது குழந்தைகள் புத்திசாலிகளாகவும், கவர்களின் கவனத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.

மஞ்சள்
மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்பதை அனைவருமே அறிவோம். அதே வேளையில் மஞ்சள் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது என்பதும் அனைவரும் அறிந்தது. அதுவும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க, நீரில் மஞ்சள் தூளைக் கலந்து அந்நீரை வீடு முழுவதும் தெளித்துவிட வேண்டும். வீட்டிற்குள் லட்சுமி தேவி வரவேண்டுமானால், அரிசி மாவில் மஞ்சள் தூளை கலந்து, அதைக் கொண்டு கோலம் போட வேண்டும்.

பட்டை
பட்டைக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கான சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பட்டைக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளதால், அதை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. அதுவும் பட்டையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், கெட்ட கனவுகளை தடுத்து இரவு நல்ல தூக்கம் வர உதவுவதோடு, நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்பை கொண்டுவர உதவுவதாக கூறப்படுகிறது.

மஞ்சள் திலகம்
இந்திய மரபுகள் பெரும்பாலும் ஒவ்வொரு சிறிய விஷயமும் செழிப்பை நோக்கிய ஒரு வழியில் பின்னப்பட்டவை. சில கலாச்சாரங்களில் மஞ்சள் மஞ்சள் திலகத்தைப் பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் மஞ்சள் நல்ல அதிர்ஷ்டத்தை தரும் மற்றும் திருமண வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

பிரியாணி இலை
பிரியாணி இலைக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படி, பிரியாணி இலை குடும்பத்திற்கு செழிப்பையும், நேர்மறையையும் கொண்டு வர உதவும் என்று நம்பப்படுகிறது. அதுவும் பிரியாணி இலையை ஒரு பானையில் போட்டு எரிப்பதன் மூலம், அதன் மணத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீட்டில் அமைதி அலைகளைக் கொண்டு வரும்.

கடுகு
பாரம்பரிய நம்பிக்கைகளின் படி, கடுகு விதைகளை வீட்டில் சிதறி விடுவதன் மூலம், வீட்டில் உள்ள எந்த வகையான எதிர்மறை ஆற்றலையும் வெளியேற்றலாம். முக்கியமாக இந்த தந்திரமானது குடும்பத்தில் உள்ள பெரிய பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.