இறுதி ரி20 போட்டியில் இலங்கை திரில் வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வேர்னர் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டேனிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை சார்பில் இறுதி ஓவர்களில் தனது அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்திய அணித்தலைவர் தசுன் ஷானக அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்ப்பில் ஹசில்வுட் மற்றும் ஸ்டேனிஸ் தலா 2 விக்கெட்டைகளை வீழ்த்தியிருந்தனர்.
இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை