அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

 


இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்த 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


நேற்று (27) இரவு நீர்கொழும்பு மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 ஆண்களும், 6 பெண்களும், 7 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.