உன்னத தியாகங்களுக்காய் தம் உயிரை மாய்த்தவர்கள்!!

 தலைக்கும் கவசம் இல்லை.. 

பாதங்களை பாதுகாக்கும் பாதணிகளும்  இல்லை..

மூன்று வேளை வயிறாற உணவில்லை..

நேரத்துக்கு உறக்கமும் இல்லை...

பெற்ற தாய்க்கு மகனாய் உன்கடமைகளை செய்யவும் இல்லை.. 

விறகுவெட்டி வளர்த்த தந்தைக்கும் பயன் இல்லை.. 

உடன்பிறப்புக்களும் கூட எந்த சந்தோஷமும் பெறவில்லை... 

இறுதியில் எதற்காக இது அனைத்தையும் தியாகம் செய்தாயோ அதுவும் நடக்கவில்லை.. இனியும் நடக்க போறதும் இல்லை..


ஆனால் இப்போ உங்கள் நெருப்பில் எண்ணற்றோர் குளிர்காய்கின்றனர், இவற்றில்  உங்களில் இருந்து ஊடறுத்து குப்பியை வீசி விட்டு குடும்பம் குட்டி காசு பணம் என கரை சேர்ந்தோரும் உள்ளடக்கம்


நகத்தை கூட இழக்கத்தவர்கள் இன்று நாங்கள் தலைவன் என்று பறை அடிக்கின்றனர் வீட்டுக்குள் விலை பேசும் நாதி கெட்ட அவ் ஐயாக்களுக்கு தெரியுமோ நீங்கள் உன்னத தியாகங்களுக்காய் தம் உயிரை மாய்த்தவர்கள் என்று..கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.