ஆய்ஷா படுகொலை சந்தேகநபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!


பண்டாரகமை - அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இவ்வாறு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.