அமெரிக்காவின் வொஷிங்டனில் துப்பாக்கி சூடு!!


 அமெரிக்காவின் வொஷிங்டன், டி.சி.இல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

யு ஸ்ட்ரீட் நொர்த்வெஸ்ட் பகுதியில், வெள்ளை மாளிகையில் இருந்து 2 மைல் தொலைவில் உள்ள இடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

14ஆவது மற்றும் யு வீதி, என்.டபிள்யு பகுதியில் சுமார் 6 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்ததாக பெருநகர காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்தவர் 15 வயதுடைய இளைஞர் எனவும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். காயமடைந்த மற்றையவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

அனுமதியின்றி நடத்தப்பட்ட மோச்செல்லா நிகழ்வில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும், அப்பகுதியை விட்டு வெளியேறும் போது பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் மோசெல்லா நிகழ்வில் மோதல் ஏற்பட்டதாக பெருநகர பொலிஸ் துறை கூறியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தாக்குதல் ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் அல்லது அவற்றை வாங்கும் வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.