காதலனின் பழிவாங்கல்!!

 


காதலி காதல் தொடர்பை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் நேற்று இரவு தனது காரால் காதலியின் வீட்டை சேதப்படுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காதலன் தனது காரை ஓட்டிச் சென்று காதலியின் வீட்டின் கேட்டை உடைத்து அதன் பின்னர் அங்கிருந்தவர்களை குழு ஒன்றுடன் இணைந்து தாக்க முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதலன் தனது காதலியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தனது காரை கொண்டு பலமுறை கடுமையாக மோதி சேதப்படுத்தியுள்ளார்.

அவர் தனது பெற்றோர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காதலி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.