தீயில் எரிந்த பெண் பலி!!

 


வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (08-06-2022) காலை தீயில் எரிந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடுத்துறை பகுதியை சேர்ந்த மேற்படி பெண், திருமணம் முடித்து யாழ் நகரை அண்மித்த பகுதியில் குடியிருந்தார்.

அண்மைக்காலமாக தீவிரமாக நோய்வாய்ப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால், ஆசிரியர் பணியிலிருந்தும் ஓய்வுபெற்றார். சுகவீனமுற்ற நிலையில் தாயார் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று தீயில் எரிந்தார்.

வீட்டு, அறைக்குள் பெற்றோல் வைக்கப்பட்டிருந்தது.

நோயின் தீவிரத்தில் தனக்குத் தானே தீமூட்டினாரா அல்லது விபத்தா என்பது தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.