விரைவில் வளரக்கூடிய மீன்கள்!!

 


ஒரு குஞ்சு கோழியாக வளர 6 மாதம் எடுக்கும் என்றிருந்த நிலை புரொய்லர் கோழி வந்ததன் பின்பாக 40 நாட்களாக குறைந்து விட்டதை பார்க்கின்றோம்.

இப்படியான புரொய்லர் கோழிகளின் வரவின் பின்னரே ஏழை மக்களும் கோழி இறைச்சி உண்ணக்கூடிய நிலை வந்தது என்றால் மிகையாகாது.

அதே போன்று பல வருடங்கள் எடுத்து வளரக்கூடிய மீன்களையும் விரைவில் வளரக்கூடிய இனங்களாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அதில் முக்கியமானது செல்வன், யப்பான், திலாப்பியா என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் Tilapia மீன் ஆகும்.

பத்து வருடம் எடுத்து ஒரு கிலோ வளரக்கூடிய திலாப்பியாவை தற்பொழுது 100 நாட்களில் 500g வளரக்கூடிய திலாப்பியா மீன்களாக வெற்றிகரமாக விஞ்ஞானிகள் உருவாக்கி இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில் பெருமளவில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றது.

ஆப்பிரிக்காவுக்கு சொந்தமான இந்த திலாப்பியா மீன்களில் நைல் திலாப்பியா, மொசாம்பிக் திலாப்பியா ஆகிய இரு இனங்களை இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையில் உள்ள நன்னீர் நிலைகளில் அறிமுகப்படுத்தினர்.

1952 ஆம் ஆண்டு மொசாம்பிக் திலாப்பியாவையும் 1956 இல் நைல் திலாப்பியாவையும் இலங்கையில் அறிமுகப்படுத்தினர். திலாப்பியா சுதேச மீன் இனங்களுக்கு ஒரு எதிரி என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவை பல்கிப்பெருகினாலும் பெரிதாக வளர்வதில்லை என்பதால் பண்ணைகளில் வளர்ப்பது இலாபகரமாக இருப்பதில்லை. இக்குறையை தீர்த்து வைக்க மேம்படுத்தப்பட்ட திலாப்பியாவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கிப்ட் திலாப்பியா - Genetically Improved Farmed Tlapia (GIFT) WorldFish என்னும் அமைப்பால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட selective breeding என்னும் ஒரு உபாயத்தால் நைல் திலாப்பியாவை மேம்படுத்தி விரைவாக வளரும் ஒரு மீனாக உருவாக்கினார்கள். இது “மரபணு மாற்றப்பட்டது அல்ல” என்பது குறிப்பிடத்தக்கது.

28 வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்திற்குப் பிறகு மேம்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட திலாப்பியா (GIFT) இப்போது அதன் இருபத்தி மூன்றாம் தலைமுறையை உற்பத்தி செய்கிறது.

இலங்கை உட்பட பின்வரும் 17 நாடுகள் தற்போது GIFT திலாப்பியாவை அங்கீகரித்துள்ளதுடன் மக்களுக்கும் பண்ணைகளில் வளர்ப்பதற்கு விநியோகிக்கின்றன.

பங்களாதேஷ், பிரேசில், சீனா, கோஸ்டாரிகா, பிஜி, கானா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, அமெரிக்கா மற்றும் வியட்நாம்.

தற்பொழுது இந்தியாவில், பண்ணைகளில் வளர்க்கப்படும் இந்த GIFT திலாப்பியா மீன்கள் ஒரு கிலோ INR 250 (LKR 1000) இற்கு விற்கப்படுகின்றன.  என முகநூலில் Kumaravelu Ganesan என்ற நபர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.