பிரான்சில் இளங்கலைத் தமிழியல் பட்ட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

 


தமிழ்ச்சோலை இளங்கலைத் தமிழியல் (BA) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதோடு, புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு எதிர்வரும்19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெறவுள்ளது.

வளர் தமிழ்-12 நிறைவு செய்த மாணவர்களையும் இவ்வாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், மேலும் தமிழ் ஆர்வலர்கள், பள்ளியில் கற்பித்துவரும் ஆசிரியர்கள் இந்தப் பட்டப்படிப்பில் இணைந்துகொள்ள முடியும் – அன்றைய தினமே பதிவுகளையும் மேற்கொள்ளமுடியும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழ்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழுக்கு ஐரோப்பிய மட்டத்தில், தாய் மொழியிலும் மற்றும் வாழிடமொழியிலும் மேற்படிப்புகளை மேற்கொள்ளுவதற்கான அங்கீகாரத்தை பிரஞ்சு அரசு வழங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தகவல்:
தமிழ்சோலைத் தலைமைப் பணியகம்.
பிரான்சு
.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.