எரிபொருள் விநியோகிக்க புதிய நடைமுறை!!

 


வாரத்தில் ஒரு முறை மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை முதலாவது வாரத்தில் இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நிதி நிலைமையை வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை இதனூடாக சீர்செய்ய முடியுமென தான் நம்புவதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “இலங்கையில் தடையற்ற மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் பாதை முகாமைத்துவம் சாத்தியமற்றதாக இருக்கும்.

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர் தங்கள் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்துவதற்கான எரிபொருளை சேமித்துக் கொள்கின்றனர்.
எனவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி உருவாவகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.