போதையில் மூழ்கும் தமிழர்களின் கலாச்சார தலைநகர்!!!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை, திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் (05/06/2022) மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திக்கம், தும்பளை மற்றும் பலாலி அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது என்ற தகவல் ஒரு பக்கம் இருக்க இந்த கஞ்சா நமது இளைஞர்களிடம் தானே விற்கப்பட தயாராக இருந்திருக்கும்? இதனை வாங்க எவ்வளவு தொகை செலவழிப்பார்கள்? இதனை பயன்படுத்திய பின் ஏற்படும் பிரச்சினைகள் என இதன் பின்னுள்ள நூற்றுக்கணக்கான கேள்விகள் அலசப்படவேண்டியவை.


யாழ்ப்பாணத்தில வாள்வெட்டுக்குழுக்களின் அட்காசம் ஒருபக்கம், திருட்டு கும்பல்களின் இரவுநேர கொள்ளைகள் ஒரு பக்கம் , போதைப்பொருள் கடத்தல்கள் ஒரு பக்கம் என சமூகச்சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த குற்றங்களில் கைதாவோரின் வயதுகள் பெரும்பாலும் 18-30 வயதுக்கு இடைப்பட்டோராகவே காணப்படுவது இன்னும் வேதனையளிக்கும் விடயமாகும்.


ஒரு காலத்தில் கல்வியின் மீது நாட்டம் காட்டுவதில் அதீத கரிசனை கொண்டிருந்த இந்த யாழ். சமூகத்து இளைஞர்களின் போக்கு முற்றிவும் மாறுபடத்தொடங்கியுள்ளது. எல்லா விடயங்களுக்கும் காவல்துறை மீது மட்டுமே குற்றத்தை போட்டுவிட்டு – கையை காட்டிவிட்டு நம்மவர்கள் ஒதுங்கிவிடும் நிலையே காணப்படுகின்றது.


மாற்றத்தை உங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பியுங்கள். பிள்ளைகளை கண்காணியுஙகள். சகோதரர்களுக்கு நல்ல விடயங்களை சொல்லிக்கொடுங்கள். பாடசாலை ஆசிரியர்கள் இளைஞர்களிடம் நல்ல விடயங்களை சொல்லிக்கொடுங்கள். போதைப்பொருள் பாவனையின் தீங்கை வகுப்பு நேரங்களில் சொல்லிக்கொடுங்கள். இப்படியாக நேரான சிந்தனைகளை அடிப்படையில் விதைப்பதே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வழிசெய்யும்.


Source: thesamnet Jeyabalan 

படம் : Sundaytimes-2015

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.