அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகாமையில் புகையிரத விபத்து!📸
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை