குருநாகல் வைத்தியர் ஷாஃபியின் முடிவு!


குருநாகல் வைத்தியர் ஷாஃபிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  சம்பள நிலுவைத்தொகையினை அப்படியே  , நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக   சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.

சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் வைத்தியர் ஷாஃபி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இவ்வாறான நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வைத்தியர் ஷாஃபி தமது சம்பள நிலுவைத்தொகைப் பணமான இரண்டு மில்லியன் ரூபாயை   குருநாகல்  வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக  வழங்கியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.