முருங்கைக்காய் சூப் - சமையல்!
ஏகப்பட்ட சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள முருங்கைக்காய் சூப் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நம்முடைய சருமமும் பொலிவு பெறும். அதே சமயம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். வெயிட் லாஸில் இருப்பவர்களும் இந்த சூப்பை தாராளமாகக் குடிக்கலாம். சூப்பரான முருங்கைக்காய் சூப் சுவையாக வைப்பது எப்படி வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.
முதலில் அடுப்பில் 1 பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் துண்டு துண்டாக நறுக்கிய முருங்கைக்காய் – 3, பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி பழம் – 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, தோல் உரித்த பூண்டு பல் – 6, மிளகு சீரகப்பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு போட்டு, 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி இந்த எல்லாப் பொருட்களையும் ஒரு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
முருங்கைக் காய் நன்றாக வெந்தது வரும்வரை வேக வையுங்கள். (மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்தும் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு உரலில் போட்டு இடித்து பொடி செய்தும் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.)
முருங்கைக்காய் நன்றாக வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். சூப்புக்கு உள்ளே இருக்கக்கூடிய முருங்கைக்காயை மட்டும் ஒரு கரண்டியால் எடுத்து தனியாக ஒரு தட்டில் போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காய்க்கு உள்ளே இருக்கக்கூடிய சதைப்பகுதியை மட்டும் 1 ஸ்பூனை வைத்து வழித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த முருங்கை சதையை அப்படியே தயாராக இருக்கும் சூப்பில் போட்டு, ஒரு மத்து வைத்து கடைந்து வடிகட்டிக் குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி குடிக்கலாம். அது நம்முடைய விருப்பம்தான்.
மிக்ஸியில் அரைக்க வேண்டும் என்றால் சூப்பை ஆற வைத்து அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி மீண்டும் சூப்பை சூடு செய்து குடிக்க வேண்டும். அப்போது தான் சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த சூப் பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் கூட இந்த சூப்பை குடிப்பது மிக மிக நல்லது. வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இந்த சூப்பை குடிக்க உடல் ஆரோக்கியம் பெறும். அழகும் பெறும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை