குடும்பத்தாரிடம் சிக்கிய கள்ளக் காதலர்கள்!
யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் கள்ளக்காதலர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறை நகரசபை ஈ.பி.டி.பி ஆண், பெண் உறுப்பினர்களான 42 ஆண் நகரநபை உறுப்பினரும், 36 வயதான பெண் நகரசபை உறுப்பினருமே இவ்வாறு ஒப்படைகபப்ட்டுள்ளனர்.
ஆண் பிரதேசசபை உறுப்பினருக்கு க.பொ.த உயர்தரம் கற்கும் மகனும், பெண் பிரதேசசபை உறுப்பினருக்கு தரம் 9 படிக்கும் பிள்ளைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இருவருக்குமிடையில் தகாத தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் இருவரும் மாயமாகியிருந்தனர். இதனையடுத்து இரண்டு குடும்பத்தாரும் அவர்களை தேடியலைந்ததுடன் பருத்தித்துறை பொலிசிலும் சம்பவம் தொடர்பில் முறையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களை பிடித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர். அதேசமயம் இருவரும் சேர்ந்த வாழ முடிவெடுத்தே வீடுகளை விட்டு ஓடிச் சென்றதாக தெரிய வருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை