குரங்கு அம்மை நோய் அவசர நிலையாக அறிவிப்பு!!

 


குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும்.

கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.

தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உட்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 58 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.