அபாய நிலையில் பத்திரிகைகள்!!

 


எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இன்மையால், கொழும்பின் சில பகுதிகளில், இன்றைய தினம் பத்திரிகை விநியோகிக்கப்படவில்லை என, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகை அச்சிடப்பட்ட பின்னர், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு, குறித்த நிறுவனங்களின் போக்குவரத்து சேவை ஊடாக நேரடியாக விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு தனியார் வாகனங்கள் மூலம் பத்திரிகை விநியோகிக்கப்படும்.

இந்தப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் கடந்த நாட்களில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமை நீடித்தால், அடுத்த வாரம் முதல் பத்திரிகை விநியோகப் பணிகள் முழுமையாக முடங்கும் என பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.