இன்றும் - நாளையும் மின்வெட்டு அறிவிப்பு!!
நாட்டில் இன்று (22-06-2022) மற்றும் நாளை (206-2022) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 12 முதல் இரவு 10 மணிக்கு வரையான காலப்பகுதியினுள், 2 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், கொழும்பு வர்த்தக, முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8 மணிவரை 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளன.
அவ்வாறே, MNOXYZ ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை