பிரதமரின் பதவிக்கு ஆபத்து

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கையடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. எனினும், அவருக்கு மேலும் ஒரு தவணை காலம் (6 வருடங்கள்) இடமளிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் இந்த கோரிக்கைக்கு பிரதமர் உடன்படவில்லை என்பதுடன் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றார்.

பிரதமரின் பதவிக்கு ஆபத்து; குழிபறிக்கும்  மொட்டுக்கட்சி

இந்நிலையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர்கள் பிரதமர் இழுத்தடிப்பு செய்தால், அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.