இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்த சிரேஷ்ட விரிவுரையாளர்!

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வன்முறை மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவார் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளினால் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை உணர்ந்து தியாகங்களைச் செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.

இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்த சிரேஷ்ட விரிவுரையாளர்! | The Senior Lecturer Who Requested Of Sri Lanka

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வன்முறை மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது ஹெய்ட்டி மற்றும் சோமாலியா நாடுகளில் ஏற்பட்ட சிவில் யுத்தம் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும்.

சட்டம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்படும். தற்போது வரையிலும் அவ்வாறான நிலைமை ஒன்றை எரிபொருள் நிலையங்களில் பார்க்க முடிகின்றது.

இந்த நிலைமை தீவிரமடைந்தால் அரசாங்கத்தினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஒன்று ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.