அபூர்வ சத்திரசிகிச்சை - இலங்கையில் சாதனை!!
மீகஹகிவுல பிரதேசத்தில் கித்துள் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபரின் நெஞ்சு பகுதியில் அல்பீசியா மரபலகை ஒன்று குத்தி மற்ற பகுதிக்கு வந்துள்ளது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நபருக்கு அபூர்வ
சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு நேற்று மாலை இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளியின் வலது தோள்பட்டை பக்கம் நுழைந்த மரத்துண்டு நெஞ்சின் நடுப்பகுதி வழியாக வெளியேறி இடது கை வழியாக வெளியே வந்துள்ளதாக சி0கிச்சைப் பிரிவு மருத்துவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
சத்திரசிகிச்சை நிபுணர் பியல் குலசூரிய உள்ளிட்ட வைத்திய பணியாளர்கள் வலியை குறைத்து நோயாளியின் உடலில் குத்தப்பட்டிருந்த மரக்கட்டைகளை பெரும் முயற்சியுடன் அகற்றியுள்ளனர்.
இவ்வளவு ஆபத்தான நிலையில் குத்தப்பட்டிருந்த ஒரு மரத்துண்டினை அகற்றுவது சாதாரண விடயமல்ல எனவும் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி நோயாளியை காப்பற்றியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை