இலங்கையில் மாறிய போக்குவரத்து முறைகள்!!

 


தற்காலத்தில் நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான எரிபொருளின் பற்றாக்குறையால், இலங்கையர்கள் சிலர் தமது அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பழைய பயண முறைகளை நாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரு நபர் தனது குதிரை வண்டியில் பயணி ஒருவருக்கு சவாரி செய்வதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் மூதூரைச் சேர்ந்த ஒருவர் சைக்கிள் ரிக்ஷாவில் பயணி ஒருவருடன் பயணிக்கும் மற்றொரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இது பழைய போக்குவரத்து முறை என்று நம்பப்பட்டாலும், இந்த பயணங்கள் டாக்கா மற்றும் புது தில்லி போன்ற பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஒரு பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகும்.

இந்த நிலையில் இலங்கை தற்போது மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதன் விளைவாக நாடு முழுவதும் பல நாட்களாக மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்லப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.