இலங்கையின் பணக்காரர்களுக்கு ஆப்பு வைத்த ரணில்!


இலங்கையில் சுமார் ஆயிரத்து 300 மில்லியன் ரூபா வரி ஏய்ப்புச் செய்த இரண்டு கசினோ முதலைகள் தங்கள் வரிநிலுவையை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாட்டின் முதல்தர பணக்காரராக கருதப்படும் தம்மிக பெரேரா 576 மில்லியன் ரூபா வரியையும், மற்றுமொரு செல்வந்தரான ரவி விஜேவர்த்தன 760 மில்லியன் ரூபா வரியையும் மிக நீண்ட காலமாக செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வந்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் அமோக ஆதரவு காரணமாக அவர்களால் வரி ஏய்ப்புச் செய்ய மட்டுமன்றி, அது தொடர்பான வழக்குகளில் இருந்தும் தப்பித்துவந்துள்ளனர்.

எனினும் தற்போதைய நிலையில் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை அரசாங்கம் திருத்தி, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதனையடுத்து தம்மிக பெரேரா தனது வரிப்பாக்கியை (576 மில்லியன்) ஒரே தடவையில் செலுத்தவும், ரவி விஜேரத்ன தனது வரிப்பாக்கி 760 மில்லியன் ரூபாவில் பாதியை முதலில் செலுத்திவிட்டு, மிகுதியை தவணை முறையில் செலுத்தவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.