ஆடு குற்றவாளியான விநோத வழக்கு!!

 


உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை  அறிகின்றோம். குறிப்பாக விலங்குகள் மீது  சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அவை விநோதமாகத் தோன்றுகின்றன. 


அவ்வாறானதொரு வழக்கு தற்போது தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளது. ஆடு ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 நடந்து சென்று கொண்டிருந்த  பெண்ணொருவரை செம்மறி ஆடு  முட்டித்தள்ளியது.   கீழே விழுந்த அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் முட்டியதால் அந்தப் பெண் பலியானார். 


மக்கள் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் அந்த ஆடு குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அந்த ஆடு சூடான் லேக் மாநில ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது  என கூறப்படுகின்றது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.