மூதூர் வைத்தியசாலை சமூகத்தினர் போராட்டம்!!
திருக்கோணமலை- மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஒன்றிணைந்து மூதூர் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இன்று(22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னுரிமைப்படுத்தி எங்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை. இதனால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றோம். இதற்குத் தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பிரதான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தலைவர் வி.எம். நஹீப் ,
வாரத்தில் ஒருநாள் மூதூர் தள வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை