நாட்டை உலுக்கிய மற்றொரு சிறுமியின் மரணம்!
வவுனியா - கணேசபுரம், 8ம் ஒழுங்கை பகுதியில்16 வயதான சிறுமியொருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் சடலம் 8ம் ஒழுங்கை பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து நேற்றிரவு (30-05-2022) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தமது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 30-05-2022 தனியார் வகுப்புக்கு சென்றிருந்த அவர், இரவு வரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் நெளுக்குளம் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இச்சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை