இந்திய - இலங்கை யுவதிகள் திருமணத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றம் சென்றதால் பரபரப்பு!


 கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றில் திருமணம் செய்து வைக்குமாறு இரு யுவதிகள் கோரிக்கைவிடுத்து அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கடந்த திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தனது நண்பியை தேடி பெண் ஒருவர் வந்துள்ளார்.

 தாங்கள் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்ததாகவும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் தனது நண்பி மூலமாக அறிமுகமாகி தொலைபேசி, வட்ஸ் ஆப் ஊடாக பேசி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்வதற்கு இணங்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா நண்பி அங்கு வருமாரு இலங்கை பெண்ணுக்கு அழைப்பு விடுத்த நிலையில், இலங்கையில் தற்போது கடவுசீட்டு பெறமுடியாத நிலை இருப்பதால் இலங்கைக்கு வருமாறு அவர் அந்தப் பெண்ணை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்திய பெண் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்ததாகவும் தான் அவளை திருமணம் முடிக்க விரும்புவதாகவும் தனது வாக்கு மூலத்தில் அக்கரைப்பற்று பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இரு யுவதிகளையும் உளநல நிபுணரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஒரேபாலின திருமணத்தை இந்தியா உள்ளைட்ட பல நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில்  இந்திய - இலங்கை பெண்கள் திருமணம் செய்துவைக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.