சொகுசு காரில் எரிபொருள் நிலையத்திற்கு வந்த பிக்குவால் குழப்பம்!!
இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முன் சுமார் 24 மணிநேரமாக பெற்றோல் வரிசையில் சுரேஷ் ஆனந்தப்பா என்ற நபர் காத்திருந்துள்ளார்.
அப்போது, அங்கு சொகுசு கார் (BMW M3) ஒன்றில் வந்த 20 வயது கடந்த இளம்வயது பிக்கு ஒருவர் 5 நிமிடங்கள் கூட செலவழிக்காமல் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் காண்காணிப்பில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் தமது வாகனத்திற்கு பெற்றோல் நிரப்ப உதவ முடியுமா என கோரியுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் நிரப்ப முதல் மூன்று இடங்களில் காத்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்று குறித்த பிக்குவின் வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பி முடியுமா என அவரும் கோரியுள்ளார்.
ஆனால் அதற்கு சுரேஷ் ஆனந்தப்பா 24 மணித்தியாலம் 24 மணிநேரம் நிறைவடையச் செலவிட்டதையும் பணிவுடன் பொலிஸாரிடம் விளக்கி மறுத்துள்ளார்.
மேலும் இரவு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் நிரப்ப வீதியில் உறங்கி இங்கேயே காத்துக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு நான் என பதில் வழங்குவேன் என கூறி சுரேஷ் ஆனந்தாப்பா இளம்வயது பிக்குவிற்கு பெற்றோல் நிரப்பி தர மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை