இலங்கையில் பாண் விலை எகிறுகிறது!


இலங்கையில் ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக இந்த விலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வது டிசம்பர் மாதத்தில் 1790 ஆக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், அதனை வளர்ச்சியடையாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.