தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல்!📸

 


தமிழின விடுதலையின் முன்னோடி தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 48வது வருட நினைவேந்தல் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் இன்று மதியம் 12.15மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் அவரது வித்துடல் விதைக்கப்பட்டுள்ள உரும்பிராய் பொது மயானத்தில் உள்ள கல்லறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.


இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.