எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் லஞ்சமா!


கண்டியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பம்ப் இயக்குனர்கள் பொதுமக்களிடம் கையூட்டு பெறுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வாகனத்தின் தாங்கியை நிரப்புவதற்கு பெற்றோல் அல்லது டீசல் பெற வேண்டுமாயின் கண்டியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பம்ப் இயக்குனருக்கு ரூபா 2000 அல்லது அதற்கு மேல் கையூட்டாக செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தாம் பாவிக்கும் வாகனத்தின் அளவைப் பொறுத்து ஆதரவு கூடும் அல்லது குறையும் என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.

இந்நிலையில் பேருந்து, லொறி அல்லது டிப்பர் போன்ற கனரக வாகனங்களுக்கு தாங்கியை நிரப்ப 2000 ரூபாவும் நடுத்தர அளவிலான காருக்கு 1000 ரூபாவும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாவும் கட்டணம் வசூலிப்பதாகவும்  கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.