வாள் வெட்டில் இருவர் பலி!!

 
இன்று (10) காலை மன்னாரில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 


இரு குழுக்களுக்கிடையில்  மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்திலேயே இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட  முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாகவும் உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.