மனைவி கழுத்து நெரித்துக் கொலை!!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகழடித்தீவு காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது 2 அரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் பிற்பகல் 12 மணியளவில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை