இந்துக்களின் மரண கிரியைகள் நடத்துவதற்கு சுவிஸில் அரசு அனுமதி!📷
சுவிஸ் நாட்டில் லவுசான் மாநிலத்தில் இந்துக்களின் மரணச்சடங்கு கிரிகைகளான ஆத்மசாந்தி, மோட்ச கடன், பிரார்த்தனை கடன், பிதுர்க்கடன் போன்ற கிரியைகளை நடாத்துவதற்கு சுவிஸ் பாராளுமன்ற அரசு அனுமதி வழங்கி லவுசானில் ஒரு ஆற்றங்கரை ஓரமாக ஓர் இடத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருக்கின்றது.
இதனை இன்று 25-06-2022 தண்டாயுதபாணி குருக்கள் சடானன சர்மா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து சிறப்பு நிகழ்வாக நடத்தினர். இந்நிகழ்வில் ஏனைய நாடுகளில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து பங்குபற்றினர்.
அத்துடன் இவ்விடத்துக்கு அனுமதி வழங்கிய சுவிஸ் அரசு அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்கும் விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது.
கீரிமலை, திருகேதீஸ்வரம், காசி, போன்ற இடங்களில் நடத்தப்படும் ஆத்துமாக்களுக்கான கிரியைகளை இனிமேல் எவ்வித பயமுமின்றி ஐரோப்பாவில் இன்றிலிருந்து முதல் முதலாக உங்கள் கிரியைகளை மிகவும் சிறப்புற நடத்தலாம் என சுவாமி சரகணபவா தண்டாயுதபாணி குருக்கள் அவர்கள் எமது க்கு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை