நவாலி சென்.பீற்றர்ஸ் படுகொலை நினைவேந்தல் - 09.07.2022

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள மீது சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 147 பேர் கொல்லப்பட்டதன் 27வது வருட நினைவேந்தல் இன்று மாலை நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.
இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
#தமிழினப்படுகொலை
#TamilGenocide
கருத்துகள் இல்லை