தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு!!

ஆரையம்பதி - தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (15) காலை 10.30 மணிக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் விவசாயிகளின் வாகனத்திற்கும் தனியார் வாகனங்களுக்குமான டீசல் விநியோகம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் வேண்டுகோளுக்கு இணங்க விநியோகிக்கப்பட்டது.


குறித்த டீசல் விநியோகத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார். 


இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி, மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி, மதத்தலைவர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


இதன்போது விவசாயிகளுக்கு டீசல் கிடைத்த மகிழ்ச்சியில் படுவாங்கரை பகுதி விவசாயிகளினால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்து நிற்கும் பொதுமக்களுக்கு மோர் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-மூலையூரான்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.