முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை குழப்பநிலை!
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை குழப்பநிலை
இன்று இங்கு பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வந்த நிலையில் இறுதியாக அம்பலவன்பொக்கணை மக்களுக்கு பெற்றோல் விநியோகிக்க வேண்டிய நிலையில் அங்கு மக்கள் வருகை தந்திருந்த நிலையில் பெற்றோல் முடிவடைந்ததால் அங்கு குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது
பல கிலோமீற்றர் தொலைவில் இருந்து வந்த மக்கள் பெற்றோல் கிடைக்காமையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர் இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது
பின்னர் நிர்வாகத்தினர் மக்களுடன் கலந்துரையாடி மீண்டும் பெற்றோல் வரும்போது முன்னிலைப்படுத்தி தருவதாக தெரிவித்த நிலையில் மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை