திருவிழாவுக்கு நின்றவர்கள் மீது டிப்பர் மோதியது!!
யாழில் உள்ள கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்னர்.
காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தில் பொலிஸார் வழிமறித்த டிப்பர் வாகனம் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி வழியாக தப்பி ஓடியுள்ளது.
இதன்போது பொலிஸார் துரத்திச் சென்றிருந்த நிலையில் நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கோவிலில் சப்பற திருவிழாவுக்கு கூடியிருந்த மக்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.
சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை