வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது!


1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் 27 வயதான இளைஞர் ஒருவர் வெலிகமையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக இவர் இப்பணத்தை வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, வீடொன்றை சோதனைக்குட்படுத்தியபோது வெளிநாட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

18208 அமெரிக்க டொலர்கள், 20035 யூரோ, 645 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், 100,000 ஜப்பானிய யென், 1000 கத்தார் றியால், 18500 திர்ஹாம் ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

மேலும் வெலிகமை கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த இச்சந்தேக நபர், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.