ஹாட்லி - மகாஜனா கிரிக்கெட் போட்டி!!



ஹாட்லிக்கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரிக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஹாட்லிக்கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 93 ஓட்டங்களால் வெற்றி.


Under 15 division III சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மகாஜனா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மகாஜனா கல்லூரி முதல் இன்னிங்சில் 37 ஓவர்களில் சகல இலக்குகளும் இழந்து 108 ஓட்டம் பெற்றது.அவ்வணி சார்பாக அர்ஜிதன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் ஹாட்லிக் கல்லூரி சார்பாக ஆகாஸ் 6 இலக்குகளும் ஆதீஸ் மற்றும் மதுசன் தலா 2 விக்கெற்றுகளை பெற்றனர்.


முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஹாட்லி கல்லூரி அணி ஆகாஷின் சதம் மற்றும் திசாரனின் அரைச்சதத்தின் உதவியுடன் 55 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு 3 விக்கெற் இழந்தது.அவ்வணி சார்பாக ஆகாஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களும் திசாரன் 65 ஓட்டமும் பெற்றனர்.பந்து வீச்சில் அர்ஜிதன் 2 விக்கெற் எடுத்தார்.



ஆட்டத்தை இடை நிறுத்தி ஹாட்லிக்கல்லூரி மகாஜனா கல்லூரியை இரண்டாம் இனிங்சிற்கு துடுப்பாட அழைத்தது.


இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாட்டப்பாடிய மகாஜனா கல்லூரி ஆகாசின் சுழல் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 32 ஓட்டத்திற்கு அனைத்து விக்கெற்றுகளையும் இழந்தது.பந்து வீச்சில் ஆகாஷ் 8 விக்கெற்றுகளும் ஆதீஸ் மற்றும் சிமித் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றி வெற்றி பெற்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.