டொனால்ட்ரம்பின் மனைவி மரணம்!!


 அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் (Donald trump) முதல் மனைவி இவானா டிரம்ப் (Ivana trump) நியூயோர்க் நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த வியாழக்கிழமை காலமானார்.

தனது மனைவியின் இறப்பை பற்றி ட்ருத் சோசியல் (Truth Social) சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 73 வயதுடைய இவர்  (Ivana Trump) மூன்று மூத்த குழந்தைகளின் தாயார் ஆவார்.

டிரம்ப் வெளியிட்ட பதிவில் "அவர் ஒரு அழகான பெண் அவர் ஒரு சிறந்த மற்றும் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.அவளுடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவளுடைய மூன்று குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் நாங்கள் அனைவரும் அவளை பற்றி பெருமை பட்டது போல அவள் அவர்களை பற்றி மிகவும் பெருமை பட்டாள்".

1997 இல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பின்னர் 1992 இல் எங்களுக்கு விவாகரத்து ஆனது. இவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது தாய் குறித்து  மகள் இவான்கா  (Ivanka Trump) இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவில்,

   " எனது தாயின் மறைவால் மிகவும் மனமுடைந்துள்ளேன். என் அம்மா சிறந்த புத்திசாலி,வசீகரமானவர். அவரது ஒவ்வொரு செயலிலும் வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் உறுதி தன்மையுடனும் செயற்படுவார்.ஒரு போதும் அவர் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் இழந்ததில்லை எனக்(Ivanka Trump)  குறிப்பிட்டுள்ளார் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.