எரிபொருள் கப்பல்கள் தொடர்பிலான அறிவிப்பு!!
இலங்கைக்கு டீசல் கப்பல்கள் மூன்றும், பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் நாட்களில் வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளதார்.
இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும், 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதே தினத்தில் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை