எரிபொருள் நிலையத்தில் மோசடி!!

 


அண்மைய நாட்களாக நாம் பெற்றோல் full tank அடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அப்படியிருந்தும் ஒரு சிலர் full tank பெற்றோல் அடித்திருப்பார்கள் ஆனால் எவ்வளவு பெற்றோல் அடித்தார்கள் என்பது பற்றி சிந்தித்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

சிந்திப்பதற்கும் நாட்டு நிலைமையும் அவகாசம் கொடுக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலைகளை பயன்படுத்தி ஒரு சில பெற்றோல் செட் உரிமையாளர்கள் பாரிய மனிதநேயமற்ற மோசடிகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கூட்டுறவுச் சங்கத்தில் பெரும் மேசடி இடம் பெறுவது மக்களால் பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக மக்கள் நீண்ட துாரம் காத்திருந்தும் இடை நடுவில் நிறுத்தியுள்ளனர் வாகரை கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர்.

தினமும் இரவு வேளையில் வாகரை கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுபக்கு பெற்றோலை அதிகளவில் எடுத்து பதுக்கியுள்ளனர்.

குறித்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 600லீட்டர் பெற்றோல் நாவலடிச் சந்தியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வாகரைப் பகுதி மக்களிற்கு பெற்றோலை கொடுப்பதை தவிர்த்து விட்டு வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் இருந்து வருபவர்களிற்கு அதிகாலை வேளையில் பெற்றோல் வழங்கப் படுகிறது.

 குறித்த பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோலை கொள்வனவு செய்வதற்கு அப்பகுதியில் இருக்கக் கூடிய வட்டிக்கு பணம் வழங்கும் வட்டி முகவர்களிடம் பணத்தைப் பெற்று பெற்றோல் வாங்குவதால் அவர்களின் முடிவே பெற்றோல் நிரப்பு நிலையத்தின் முடிவாகவும் உள்ளது.

இன் நிலையத்தின் பெறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருக்கும் வாழைச்சேனையில் இருந்து சென்று வருபவர் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை வீடியோ ஆதாரமாக சேகரிக்கப் பட்டு எமக்கு அனுப்பி வைக்கப் பட்ட போதும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இரகசிய விசாரணை இடம் பெறுவதால் நாம் பிரசுரிக்க முடியாத சூழ் நிலை உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இப்போது இடம் பெறும் மோசடியையும் மக்கள் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் தொலைபேசி ஊடாக கொழும்பு தலைமையகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவை தொடர்பான விசாணை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமாக முன்வந்து வழங்கப்படும் எரிபொருள்களின் அளவினை திடீர் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்து வெளிப்படுத்தும் பட்ச்சத்தில் மக்களை மோசடி கும்பல்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

இம் மோசடியில் ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான மோசடி தொடர்பில் பிரதேச செயலாளர் முறையான கண்காணிப்பினை மேற்கொள்வதில்லை என்கிற குற்றச் சாட்டு மக்களால் முன்வைக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் ஓரளவு சீராக இடம் பெறுகிறது, வாகரையில் மட்டும் நிலமை தலைகீழாக உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை கூட்டுறவுச் சங்கத்தில் மட்டுமே கறுப்புச் சந்தையில் அதிகளவு எரிபொருள் விற்பணை ஆகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தகவல் கிடைத்துள்ளதாக இரகசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.