கோட்டபாய தொடர்பில் இந்தியாவின் அறிவிப்பு!!


 கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்த பின்னர் நாட்டிலிருந்து, அவர் தப்பிச் சென்றதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி (Arindam Bagchi) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மூலம் முன்னேற்றத்திற்கான அபிலாஷைகளை நனவாக்க முற்படுகையில், அவர்களுடன் இந்தியா தொடர்ந்திருக்கும் என்றும் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு (2022) மட்டும் 3.8 பில்லியன் டொலர் உதவியை, இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு முக்கியமான அண்டை நாடு, அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் புதுடெல்லி தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.