விமானிகள் கோட்டாபயவை ஏற்றிச் செல்ல மறுப்பு!

 


ஜனாதிபதி கோட்டாபய இன்று (11) விமானப்படையின் AN 32 பயணிகள் போக்குவரத்து விமானத்தில் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு தயாராகிவிட்ட போதும் , அவரால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

இன்று காலை, திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்குச் சென்று, அங்கு சிறிது நேரம் தங்கியிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 மற்றும் பெல் 212 ஆகிய இரண்டு ஹெலிகொப்டர்களில் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதன்பின் , சில காரணங்களால் திட்டமிடப்பட்ட விமானப்படையின் ஏஎன் 32 விமானம் இல்லாமல் , இலங்கை விமானம் யூஎல் 220 இல் நாட்டை விட்டு வெளியேற கோட்டாபய மற்றும் அவரது குழுவினர் தயாராகினர்.

எனினும் அந்த விமானங்களை செலுத்தும் சிவில் விமானிகள் ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் காரணமாகவே சபாநாயகர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அதாவது முதலில் , கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு கூறிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, சற்று நேரத்தின் பின்னர் ஜனாதிபதி எங்கும் செல்லவில்லை என்றும் நாட்டிலேயே தங்கியிருக்கின்றார் எனவும்  அந்த தகவல்கள் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.